வீட்டில் பால் இல்லையா? அப்போ இந்த டீயை ரெடி பண்ணுங்க.!!
how to make coriander tea
வீட்டில் பால் இல்லையா? அப்போ இந்த டீயை ரெடி பண்ணுங்க.!!
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தேநீர் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். பொதுவாக தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தேநீரில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் கொத்தமல்லியை வைத்து தேநீர் போடுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருள் :-
கொத்தமல்லி விதை
ஏலக்காய்
கருப்பட்டி
பால்

செய்முறை:-
கொத்தமல்லி விதையை முதலில் ஒரு கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். அது ஆறிய பின்னர் பொடியாக இடித்து கொள்ளவும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் நீரை ஊற்றி கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை போட வேண்டும்.
இது கொதித்த உடன் ஏலக்காய், கருப்பட்டி, பால் சேர்த்து குடிக்கலாம். அதுமட்டுமல்லாமல், இந்தத் டீயை பால் இல்லாமலும் குடிக்கலாம்.
English Summary
how to make coriander tea