Healthy version: குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ்...! - Seithipunal
Seithipunal


பீட்ரூட் - பச்சை பட்டாணி புலாவ்
தேவையான பொருட்கள் :
பொருள்                                                    - அளவு
பாஸ்மதி அரிசி                                      4 கப் 
பீட்ரூட்                                                   கால் கிலோ 
பெரிய வெங்காயம்                        1
பட்டை                                                  2
இலவங்கம்                                        4
பச்சை மிளகாய்                              3
இஞ்சி பூண்டு விழுது                        1 டீஸ்பூன்
தயிர்                                                   1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள்                                 அரை டேபிள் ஸ்பூன் 
தனியாத் தூள்                                   அரை டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி தழை                       1 கைப்பிடி அளவு
நெய்                                                   1 டேபிள் ஸ்பூன்
பச்சை பட்டாணி                           100 கிராம்
உப்பு                                                   தேவைக்கேற்ப

தாளிக்க:
எண்ணெய்                           - தேவைக்கேற்ப
கடுகு                                     - அரை டீஸ்பூன்
பெருங்காயம்                           - ஒரு சிட்டிகை 
கறிவேப்பிலை                        - 1 கொத்து
செய்முறை :
முதலில்,பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்மதி அரிசியை கழுவி, 10 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம், தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது வதக்கி, அடுத்து மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி தயிர் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும். பிறகு ஊறவைத்த அரிசி, உப்பு, கொத்தமல்லி தழை, நெய், பச்சை பட்டாணி சேர்த்து சமமாக கலந்து குக்கரை மூடி, 1 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். தயார் செய்த கலவையுடன், சாதம் உடையாமல் சமமாக கலந்து விடவும். சூடான பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Healthy version Kids favorite beetroot green pea pulao


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->