நீங்க ஆரோக்கியமா இருக்கணுமா?... இதை follow பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


சமச்சீரான உணவு :

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு ஊட்டச்சத்து மிகமிக அவசியம். அதற்கு சத்தான, சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். நம்முடைய உணவில் உப்பு, சர்க்கரை, போன்றவை அளவாக இருக்க வேண்டும். கொழுப்புச்சத்து குறைவாக இருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :

செயற்கையான பழரசபானங்கள், குளிர்பானங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஆறு வேளை :

மூன்று வேளை உண்ணாமல், உணவை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. மூன்று வேளை உண்ணுவதாக இருந்தால், நான்கு மணி நேர இடைவேளையில் சாப்பிட வேண்டும். காலை உணவை அதிகமாகவும், மதியம் மிதமாகவும், இரவு குறைவாகவும் உட்கொள்ள வேண்டும்.

உணவு :

காலை மட்டும் அல்ல, எந்த வேளை உணவையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

டீ, காபி :

பொதுவாக டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதிலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக்கூடாது. புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். 

காஃபின் என்னும் வேதிப்பொருள் தேநீரில் குறைவாகவும், காபியில் அதிகமாகவும் இருக்கிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

நட்ஸ் :

தினமும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி என அனைத்தும் கலந்த நட்ஸில் ஒரு டீஸ்பூன் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரும்.

உடற்பயிற்சி :

சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க முடியும். ஆனால், இன்று நிறைய பேர் உடற்பயிற்சி செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்வதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். 

தூக்கம் :

ஒரு நபர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது அவருடைய வயதையும், சூழ்நிலையையும் பொறுத்து மாறும். பிறந்த குழந்தைகள் 16-18 மணிநேரமும், 1-3 வயதுள்ள குழந்தைகள் 14 மணிநேரமும், 3-4 வயதுள்ள குழந்தைகள் 11-12 மணிநேரமும் தூங்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் குறைந்தது 10 மணிநேரமாவது தூங்க வேண்டும். பருவ வயது பிள்ளைகள் 9-10 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரமும் தூங்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

health tips 7


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->