சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.. முள்ளங்கி பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க! - Seithipunal
Seithipunal


நாம்  அன்றாட பயன்படுத்தும்  முள்ளங்கியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன . அவை என்னவென்று பார்க்கலாம்.

முள்ளங்கியில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6  ரிப்போ ஃப்ளேமின் , நியாசின், தயமின், போலெட், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனிசு போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

முள்ளங்கியில் இருக்கும் குளுக்கோசினோலேட் மற்றும் ஐசோதியோசயனேட் போன்ற ரசாயன கலவைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன . முள்ளங்கி சாப்பிடுவதால் நம் உடலில் அடிபோனெக்டின்  உற்பத்தியை அதிகரிக்கிறது. 

இந்த ஹார்மோன், இன்சுலின் எதிர்ப்பிலிருந்து நம் உடலை பாதுகாக்க உதவும். முள்ளங்கியில் இருக்கக்கூடிய 
இண்டோல் கார்பினோல் மற்றும் மெத்தில்தியோ பியூடெனைல் ஐசோதியோசயனேட் ஆகியவை நம் கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய  காரணிகளிலிருந்து நம் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. 

மேலும் இந்தக் கலவைகள் நமது சிறுநீரகத்தையும் நச்சுத்தன்மைகளிலிருந்து பாதுகாக்கிறது. முள்ளங்கியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் நம் உடலின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. 

மேலும், இருதய நோய்க்கான பயத்தையும் குறைக்கின்றன. முள்ளங்கியில் காணப்படும் இயற்கையான நைட்ரேட் அமிலங்கள் நம் உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

முள்ளங்கியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலுக்கு ஏற்படும் பொதுவான சளி மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது. 

முள்ளங்கியானது கொலாஜனின் உற்பத்தியில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த முள்ளங்கியானது பெருந்தமணி தடிப்பு எனப்படும் ஆத்தெரோசிகிளீரோசிஸ் என்னும் நோயிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of Mullangi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->