ஊரில் கிடைக்கும்.. கொடுக்காபுளியில் இவ்வளவு மருத்துவ ரகசியமா.?!
Health benefits of monkey pod or manila tamarind
இனிப்பு, புளிப்பு து,வர்ப்பு என்று மூன்று சுவைகளை கொண்டது இந்த கொடுக்காப்புளி. இதில் வைட்டமின் ஏ, சி, பி 1, பி 2, பி 16, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் இன்னும் பல சத்துகளை கொண்டிருக்கிறது. இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் .
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொடுக்காபுளியில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது . மேலும் இது காற்றினால் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகள் மற்றும் கிருமி தொற்றுகளில் இருந்து உடலை காக்கிறது.

பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் கொடுக்காபுளியை தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் இவற்றில் இருக்கும் சத்துக்களின் காரணமாக கல்லீரலை தாக்கக்கூடிய மஞ்சள் காமாலை மற்றும் மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் .
கொடுக்காப்புலியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை நம் உடலின் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதோடு உன் காயங்கள் ஆறுவதற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

செரிமானம் சம்பந்தப்பட்ட அஜீரணக் கோளாறுகள் வயிறு உப்புசம் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு அருமருந்தாக செயல்படுகிறது கொடுக்காப்புளி. இவற்றில் இருக்கின்ற நார்ச்சத்து உடலின் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதோடு குடல் புண்ணிற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
இதுமட்டுமிலாமல் இந்த கொடுக்காபுளி அழகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. இதன் விதைகளை மைய்யாக அரைத்து முகத்தில் பூசிவர முகப்பரு கரும்புள்ளிகள் கருவளையம் தேமல் முகச்சுருக்கம் இன்னும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த கொடுக்காபுளி உதவுகிறது இவ்வளவு பலன் தரும் இந்த அருமருந்தை இனி சாலையோரம் கண்டும் காணாமல் செல்வோமா நிச்சயம் அனைவரும் பயன் பெறுவோம்.
English Summary
Health benefits of monkey pod or manila tamarind