கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய கொத்தவரங்காய்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டுச் சமையலில் அடிக்கடி இடம்பெறுவது கொத்தவரங்காய்! ஆனால் அதில் இவ்வளவு சத்துக்களா? என்று நாம் திகைத்துப் போகும் அளவுக்கு பெற்றிருக்கிறது.

கொத்தவரங்காயில் அதிகளவு நார்ச்சத்து, மினரல்ஸ், வைட்டமின்ஸ், தாவரப்புரதம் நிறைந்துள்ளதால் இது உடலுக்கு அதிகப்படியான சத்துக்களை அளிக்கிறது.

கொத்தவரங்காயில் ஃபோலேட், மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்கிறது.

கொத்தவரங்காயில் இருக்கும் ஹைப்போ கிளைசெமிக் மூலக்கூறுகள் மன அழுத்தத்தை குறைக்கவும், கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைய உதவுகிறது.

கொத்தவரங்காயில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து உடல் எடையை கண்காணிப்பதுடன் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

கொத்தவரங்காயில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பை உறுதியாக்குகிறது.

கொத்தவரங்காயில் இருக்கும் நார்ச்சத்து,பொட்டாசியம், பைட்டோனூட்ரியன்ஸ் இரத்தத்தில் சர்க்கரை அளவையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து வராமல் காக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Health benefits of cluster beans for pregnancy period


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->