அடேங்கப்பா! புதிய சாதனை படைத்த தனுஷின் குபேரா படம்...! - Seithipunal
Seithipunal


தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் பான்-இந்தியா படமான ''குபேரா'', மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று முன்தினம் அதாவது ஜூன் 20 உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான 'நாகார்ஜுனா' மற்றும் இளம் நடிகை 'ராஷ்மிகா மந்தனா' ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வென்றது.மேலும், இது அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரதிபலித்துள்ளது. அவ்வகையில்,இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் உலகளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த 'தனுஷ்' படம் என்ற சாதனையை ''குபேரா'' பதிவு செய்திருக்கிறது.

இதற்கு முன்னதாக தனுஷ் நடித்திருந்த ''ராயன்'' படத்தின் ரூ. 23.46 கோடி வசூலை முறியடித்து ''குபேரா'' இந்த புதிய சாதனையை படைத்திருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adengappa Dhanushs Kubera movie sets a new record


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->