விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நயன்தாரா...! - Seithipunal
Seithipunal


 தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவரும், நடிகருமான 'விஜய்', இன்று தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு நடிகை நயன்தாரா அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வருகிற ஜனவரி 9 -ம் தேதி அன்று வெளியாகவுள்ள அவரது 'ஜன நாயகன்' படத்திற்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நயன்தாரா:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்த்தலப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ''அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும். ஜனநாயகனுக்கு வாழ்த்துகள்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, விஜய் மற்றும் நயன்தாரா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான திரை ஜோடி. பல வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அவர்கள் முதன் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சிவகாசி படத்தில் திரையைப் பகிர்ந்து கொண்டனர். அதில், நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

பின்னர் பிரபு தேவா இயக்கிய வில்லு (2009) படத்தில் பணியாற்றினர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு, அட்லீ இயக்கிய பிகில் (2019) படத்தில் நடித்தனர். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayanthara wished Vijay a happy birthday


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->