Freedom Fighter : ரோஜா மலர் என்றவுடன் நம் நினைவில் வருபவர்.! - Seithipunal
Seithipunal


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்:

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர். ரோஜா மலர் என்றவுடன் நம் நினைவுகளில் வரும் முதல் நபர் இவர்தான். 

இவர் பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.!

பிறப்பு :

ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மோதிலால் நேரு, தாயார் சுவரூப ராணி அம்மையார். உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் ஆவார்.

திருமண வாழ்க்கை :

ஜவஹர்லால் நேரு அவர்கள், 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி கமலா கவுல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இந்திரா பிரியதர்ஷனி என்ற மகள் (இந்திரா காந்தி) பிறந்தார்.

கல்வி :

ஜவஹர்லால் நேரு ஹார்ரோவில் பள்ளிப்படிப்பை முடித்தார். டிரினிட்டி கல்லூரிக்கு சென்று இயற்கை அறிவியல் படித்தார். 1910ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் படிப்பை முடித்தார். பின்னர் டெம்பிலில் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த நேரு தனது சட்டப் பணியை தொடங்க 1912ல் இந்தியா திரும்பினார்.

விடுதலை போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவின் பங்கு :

ஜவஹர்லால் நேரு 1916ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்தார். முதல் சந்திப்பின்போதே அவர் மகாத்மா காந்தியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.

1919ஆம் ஆண்டு இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஆங்கில அரசு தலைமையில் அதிகாரிகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர். அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சியின் மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.

காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1926ஆம் ஆண்டு முதல் 1928ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள சுதந்திர நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்ல உறவை வளர்ப்பதில் சேர்ந்து பணியாற்றினார்.

சத்தியாகிரகம் மற்றும் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935ஆம் ஆண்டுகளில் அவர் 269 நாட்கள் நேரு சிறையில் கழித்தார்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலை பெற்றது. புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவிற்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் 1951ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 1952ஆம் ஆண்டு மே வரை நடைபெற்ற தேர்தலில் முதல் இந்திய பிரதமராக ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். மிக அதிக காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்குரியவர் நேரு.

ஜவஹர்லால் நேருவின் மறைவு :

சீனா உடனான போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேருவின் மீது முதன்முதலாக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் ஐந்து மாதங்களில் மூன்று முறை பக்கவாதத்துக்கு உள்ளாகி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்தார் நேரு. 1964ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து திரும்பிய நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, மே 27ஆம் தேதி அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freedom Fighter jawaharlol nehru history


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->