குழந்தைகளுக்கு புடிச்ச சோன் பப்டி செய்யலாமா...!
Can I make Pudicha Soan Papdi for children
சோன் பப்டி...உங்க வீட்டு குழந்தைகளுக்கு பிடிச்சமாதிரி வீட்லையே செஞ்சு ஹெல்த்தியோட குடுத்துப் பாருங்க ...சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கடலை மாவு 2 கப்
மைதா மாவு 2 கப்
சர்க்கரை 4 கப்
நெய் 250 கிராம்
பால் 5 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்
பாதாம், பிஸ்தா தேவையான அளவு

செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதாவைக் கொட்டி நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும்.
பிறகு அதனை குளிர வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை, பால் சேர்த்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.பிறகு ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ளவும். குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும்.
அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும்.
பின்பு, அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, சதுர வடிவத் துண்டுகளாக்கி, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்தால் சூப்பரான சோன் பப்டி தயார்.
English Summary
Can I make Pudicha Soan Papdi for children