உடல் எடையை குறைக்க உதவும் ப்ளாக் காஃபி ..!
Black Coffee For weight loss
டீ, காஃபி இந்த இரன்டில் ஒன்று தான் பெரும்பாலனவர்களின் நாளை தொடங்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது. அதேபோல ப்ளாக் காஃபி குடித்தால் உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.
குறைவான கலோரி: குறைவான கலோரி உள்ள காஃபியை நாம் எடுத்து கொள்ளும் போது நமது உடல் எடையை ஈசியாக குறைக்கலாம்.

குளோரோஜெனிக் அமிலம்: கருப்பு காபியில் ‘குளோரோஜெனிக்’ என்ற அமிலம் உள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. இது இரவு உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு உடலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியை தாமதப்படுத்துகிறது. மேலும் புதிய கொழுப்பு செல்களின் உருவாக்கத்தையும் குறைக்கிறது.இதனால் உடலுக்கு மிகவும் குறைந்த கலோரி மட்டுமே கிடைக்கும்.
பசியை கட்டுப்படுத்துவது: காஃபியில் உள்ள காபின் மூலபொருளானது பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. இது நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அதேநேரத்தில் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

கொழுப்பை குறைக்க: நமது உடலில் உள்ள் கொழுப்பை கரைக்க உதவும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மிதமிஞ்சிய கொழுப்புகளை நீக்குகிறது.
English Summary
Black Coffee For weight loss