இந்த விஷயம் தெரிந்தால் கிவி பழத்தை உங்கள் உணவில் இருந்து ஒதுக்கமாட்டீர்கள்..!
Benefits of Kiwi Fruit
பழுப்பு நிற தோலும் கருப்பு நிற விதைகளும் கொண்ட கிவி பழங்கள் பல ஊட்டசத்துக்களை கொண்டுள்ளன. கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளது.கிவி பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
கொழுப்பை குறைக்க: கிவி பழம் இரத்த உறைதலைத் தவிர்க்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ரத்த குழாய்களில் உள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

செரிமானத்திற்கு: கிவி பழத்தில் உள்ள ஃபைபர் தவிர, ஆக்டினிடின் என்ற நொதியைக் கொண்டுள்ளது. இது வயிற்றில் உள்ள உணவுகள் விரைவில் செரிமானமடைய உதவுகிறது.
கண்களுக்கு: பார்வை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கிவி பழம் சிறந்த தீர்வாகிறது. கிவி பழம் சாப்பிடுவதால் கண் சிதைவு பாதிப்பு 35 சதவீதம் குறையும் என ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதய நோய்களுக்கு : கிவி பழம் சாப்பிடுவதால் டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைக்கிறது. கிவியில் உள்ள வைட்டமின் சி ரத்த அழுத்ததை கட்டுபடுத்துவதால் இயத நோய் பாதிப்புகளை தடுக்கும்.