மூளை முதல் பாதம் வரை.. நன்மைகளை வாரி வழங்கும் பீட்ரூட் ஜூஸ்.! - Seithipunal
Seithipunal


காய்கறி வகைகளில் ஒன்றான பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்தப் பதிவில் காண்போம்.

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், எண்ணெய் சருமம், முகப்பரு உள்ளிட்டவை நீங்குகிறது. இந்த பீட்ரூட்டுடன் கேரட் அல்லது வெள்ளரிக்காய் சேர்த்து குடிப்பதால் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும். 

பீட்ரூட் ஜூஸ் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குவதுடன் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமத்திற்கு உடனடி பளபளப்பை தரும். பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும். 

* உதடுகள் கருமையாகவோ அல்லது பொலிவு இழந்தோ இருந்தால் பீட்ரூட் ஜூஸை உட்கொள்ளுங்கள். தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி வந்தால் பத்து நாட்களில் மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளைப் பெறுவீர்கள்.

* தினமும் உணவில் பீட்ரூட்டை சேர்ப்பதால் மயிர்க்கால்கள் பலமாகிறது. அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமான முடிக்கு தேவையான அனைத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் வழங்குகிறது. இது முடியை அடர்த்தியாக வளர்ப்பது மட்டுமின்றி நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

* பீட்ரூட் சாற்றில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை ஆதரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of beetroot juice


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->