அற்புதமான நன்மைகள் கொண்ட அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன பயன்கள்.?
Benefits of Arumkampul juice
அருகம்புல் என்பது மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகையாகும். இது கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகள் மற்றும் பசுமையான இடங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி அருகம்புல் ஜூஸாக எடுக்கப்படுகிறது.
இயற்கை மருத்துவ மூலிகையான அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம். அந்த வகையில் அருகம்புல் ஜூஸ் தினமும் குடிப்பதால் உடலில் உள்ள பல நோய்களை எளிதாக விரட்ட முடியும்.
அருகம்புல் ஜூஸை தினமும் வாரத்தில் 2 அல்லது 3 முறை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் குடிக்க முடியவில்லை என்றால் மாலையில் குடிக்கலாம்.
கோடைகாலங்களில் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும்.

அருகம்புல் ஜூஸில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ரத்தக் குழாய்கள் சுருக்கமடைவதை தடுத்து உடலில் ரத்த ஓட்டத்தை தடையின்றி சீராக வைக்க உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
அருகம்புல் ஜூஸ் இரத்த சுத்திகரிப்பிற்கு மிகப்பெரிய உதவியாக அமைகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் பித்தத்தின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் வாயு தொல்லையால் ஏற்படும் நெஞ்செரிச்சல், பசியின்மை போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது.
குறிப்பாக அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் நரம்பு தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக பயன்படுகிறது.
English Summary
Benefits of Arumkampul juice