பனங்காய் நினைவுள்ளதா.?! 90'ஸ் கிட்ஸின் நினைவலைகள் இதோ.! - Seithipunal
Seithipunal


பனம் பழம்" என்றவுடன் உங்கள் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறுகிறதா? வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பனம்பழத்தை ரசித்திருந்தால் கட்டாயமாக எச்சில் ஊறி இருக்கும்.

"எட்டாக்கனி புளிக்கும்" என்பார்கள்.உண்மையில் நகரவாசிகளாகிவிட்ட நமக்கு பனம் பழம் எட்டாக்கனி தான்.

ஆனால் புளிப்பு அல்லது ஒரு விதமான இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளின் கலவை தான் இந்த பனம்பழம். பனைமரம் இல்லாத ஊர்களைக் காணக் கிடைப்பது அரிது.

நன்றாக பழுத்த பனம்பழம் ஒரு வாசம் வீசும் பாருங்கள் அம்மம்மா!!

அக்காலத்தில் சுடப்படும்  பனம்பழ கைப் பக்குவம் இந்தக்காலத்து பெண்களிடம் இம்மியளவுக்கும் இருக்காது என்பது கல்யாணமானவர்களுக்கே வெளிச்சம்!

பனம் பழம் ஒன்றின் உள்ளே மூன்று கொட்டைகள் இருக்கும். நல்ல ஊதிப்பருத்த பனம்பழம் செம கனம் கனக்கும். இரண்டு தொடக்கம் மூன்று கிலோ வரை தேறும்.

அப்படியானவற்றில் ஒரு பனங் கொட்டை சூப்பினாலே வயிறு நிறைந்து விடும்.

பனங்காய் பழுத்து விழும் வரைக்கும் பொறுமை இல்லாதவர்களும், கள்ளு குடிக்க விருப்பமில்லாத பெரும்பாலானவர்களுக்கும் "நுங்கு"மேல் கொள்ளை ஆசை.

பனம் பழம் இளங் காய்களாக இருக்கும் போது அதன் உள்ளே இருக்கும் திரவத் தன்மையான பதார்த்தம் தான் நுங்கு. இனிப்பாக இருக்கும்.

நாங்களும் கள்ளு அடிக்கிறோம் என்ற நினைப்பில் அடிப்பவர்களுக்கு சற்று கிக்கையும் தரக்கூடியது இந்த நுங்கு.

பெரும்பாலான வீடுகளில் நுங்கு குடிக்க சிறுவர்கள் ஆசைப்பட்டாலும் பெருசுகள் விடுவதில்லை. காரணம் பனம்பழம், மற்றும் அதன் கொட்டைகளை வைத்து பெறக் கூடிய பனங் கிழங்குகளுக்கும் அதைப் பின் தொடர்ந்து வரும் புழுக் கொடியலுக்கும் (ஒடியல்) ஆகும்.

பனையும் தென்னையும் தங்களது உடலில் உள்ள அனைத்தையும் மனிதர்களுக்காய் தாரை வார்ப்பன. வேண்டியதெல்லாம் தருவதால் தான் பூலோக கற்பகதரு என்று சிறப்பிக்கின்றோம்.

இத்தகைய பயன்களை கொண்ட பனை தென்னை வளங்களானது பெரும்பாலும் ஏற்கனவே அழிக்கப்பட்டதோடு, தற்போதைய தலைமுறையினருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது என்பது தான் கொடுமை.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90s kids panam pazham


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal