வீட்டில் இந்த இருநேரமும் உறங்கக்கூடாது... ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாம் செய்யும் ஒரு செயலின் முதல் மற்றும் முடிவு இரண்டுமே முக்கியமானது. அதேபோல் ஒரு நாளின் துவக்கம் மற்றும் முடிவு இரண்டும் முக்கியமானது. இங்கே நாம் நாளின் துவக்கம் மற்றும் இறுதி என்பதை அந்த நாளின் சூரியன் உதயமாகும் நேரத்தையும், சூரியன் அஸ்தமடையும் நேரத்தையும் கூறலாம். இந்த இரு வேளைகளிலும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்கும். 

தியான பயிற்சிகள், சுபகாரியங்கள் போன்ற பலவிதமான நல்ல செயல்களை அதிகாலை மற்றும் மாலை வேளையிலும் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இந்த இருவேளைகளில் மட்டுமே பூஜை செய்கிறார்கள் என்றால் அந்த நேரம் தான் இறைவனின் வருகைக்கான நேரம். எனவே இந்த நேரத்தில் நாம் உறங்குவது இறைவனை ஊதாசீனப்படுத்துவதை போன்றதாகும்.

மூன்று குணம் :

ஒவ்வொரு மனிதரிடமும் சாத்வீக, ரஜோ மற்றும் தாமச குணம் அதாவது (அமைதி, தீவிரம், மந்தம்) இந்த மூன்று குணங்களும் இருக்கும். அதனால் ஒருவர் மாலை வேளையில் தூங்கும்போது மந்தம் என்று சொல்லப்படும் தாமச குணம் அதிகமாக உயரும்.

முப்பெரும் தேவியர் :

முப்பெரும் தேவியரும் சஞ்சரிக்கும் மாலை பொழுதில் வீட்டில் குழந்தைகள் படிப்பது, தெய்வீக பாடல் கேட்பது போன்ற நல்ல அதிர்வுகள் நிறைந்த பணிகளை ஒருவர் மேற்கொள்ளும் பொழுது அதற்கு இந்த இயற்கையே இசைவாக அமையும்.

 மாறாக அந்த நல்ல பொழுதில் உறங்கி அதனை வீண் செய்வது, நமக்கு இயற்கை கொடுக்கிற நல்ல வாய்ப்பை நழுவ விடுவதை குறிக்கின்றது.

விளக்கு வைக்கும் நேரம் :

மாலை நேரத்தை 'விளக்கு வைக்கும் நேரம்" என்பார்கள். இந்த நேரத்தில் விளக்கை வணங்கிய பிறகு தான் வீட்டின் முகப்பு விளக்கை ஏற்றுவார்கள். 

அதற்கு காரணம் அந்த ஒளி நம் வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அழித்து விடுமாம்... மேலும் நல்ல அதிர்வுகளையும் வீட்டிற்குள் கொண்டு வரும் என்பது நம்பிக்கை.

அறிவியல் ரீதியாக :

அறிவியல் ரீதியாகவும், மாலையில் உறங்கி எழுவது புத்துணர்ச்சியை தராது. சௌகரியமான மனநிலையையும் கொடுக்காது. மேலும் செரிமாணத்தை பாதிக்கும். இந்த நேரத்தில் உறங்குவதை நம் முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.

எனவே நல்ல அதிர்வுகள் மற்றும் ஆற்றல் எங்கிருந்தாலும் அதற்கு இசைவாக நம்மை மாற்றி நல்ல வாய்ப்புகளை வசமாக்கிக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 times sleep


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal