பெண்களுக்கான தினம் இன்று... அப்படி என்ன நாள்? உலக மகளிர் தினம்..!
world women's day celebration
பல கனவுகளை தூக்கி
சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவியாய்...!
பெண்கள் இந்நாட்டின் கண்கள்...
ஆண்களுக்கு நிகராக தங்கமாய் பிறந்து...
சிங்கமாய் வாழும் பெண்கள்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.....!
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
சாஹிர் லுதியான்வி
பிரபல இந்தி திரைப்படப் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வி 1921ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்துல் ஹயீ சாஹிர்.

கல்லூரியில் படிக்கும்போது, இவர் எழுதிய ஈரடிக் கவிதைகளால் பிரபலமானார். 1943ஆம் ஆண்டு 'தல்கியா" என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதன் பிறகு, இவரது புகழ் பரவியது. 1945ஆம் ஆண்டு உருதுப் பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்தி படங்களில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். முதன்முதலாக இவரது பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'ஆஸாதி கி ராஹ் பர்" (1949). எஸ்.டி.பர்மன் இசையில் வந்த 'நவ்ஜவான்" (1951) படத்தில் வரும் பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.
டேனிஷ் இக்பால் எழுதிய 'மை சாஹிர் ஹூ" என்ற புத்தகம் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் ஆராய்ச்சிப் புத்தகமாக விளங்கியது.
மக்கள் கவிஞராகப் போற்றப்பட்ட சாஹிர் லுதியான்வி 1980ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
world women's day celebration