பெண்களைப் போற்றுவோம்.. சர்வதேச மகளிர் தினம் இன்று..!
world womens day 2022
சர்வதேச மகளிர் தினம் :
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது
மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.

ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.