பெண்களே..! இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் யோசிக்காமல் இதை செய்யுங்கள்!
womens health tips 6
மனஅழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும்.
குறுகிய கால மனஅழுத்தத்திலிருந்து நீண்ட கால மனஅழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்.
மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்...
காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது மனஅழுத்தத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைப்பதால் நாம் எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.
பேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். காத்திருக்கும் சமயத்தில் ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பது காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல் தேவையற்ற மனஅழுத்தத்தையும் குறைக்கும்.
வேலைகளை பின்னர் செய்து கொள்ளலாம் என ஒதுக்கி வைப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல பழகுங்கள். பத்து நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.