மார்பக நலனில் பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன?.. எதனால் மார்பக வலி ஏற்படுகிறது?.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பெரும்பாலும், பெண்களின் மாதவிடாய்க்கு முன்னதாகவும், பின்னரும் மார்பகங்களில் வலி இருக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களிலும் வலி ஏற்படும். மாதவிடாய் நாட்களுக்கு முன்னதாக ஏற்படும் வலி, மாதவிடாய்க்கு பின்னர் படிப்படியாக குறையும். 

மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் மார்பக வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சமச்சீரற்ற நிலைமை காரணமாக அமைகிறது. சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்ட்டிக் ஓவரியன் டிஸிஸ் (பி.சி.ஓ.டி) காரணமாக பெண்களுக்கு மார்பகத்தில் வலியோடு நீர்கட்டும் பிரச்சனை ஏற்படலாம். 

பி.சி.ஓ.டி பிரச்சனைக்கான அறிகுறி இருக்கிறதா? என சோதனை செய்ய வேண்டும். அதிகளவு உடல் எடை, மாதவிடாய் பிரச்சனை, உடலில் தேவையற்று அதிகளவு உரோமங்கள் வளருதல் போன்றவை பி.சி.ஓ.டியின் பொதுவான அறிகுறிகள் ஆகும். இவற்றுக்கு உடற்பயிற்சி, மருந்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு மூலமாக தீர்வு காணலாம். 

உடலின் ஆரோக்கியம் மனதின் ஆரோக்கியத்தையும் சார்ந்து உள்ளது. மன அழுத்தம் ஏற்படாத அளவு அல்லது ஏற்பட்டாலும் அதனை நகர்த்தி எரிந்து செல்வது போன்ற செயல்கள், மகிழ்ச்சியாக இருந்தால் போன்றவை முக்கியம் ஆகும். மன அழுத்த பிரச்சனை இருந்தால் ஹார்மோன்களில் சீரற்ற தன்மை ஏற்பட்டு மார்பகங்களில் வலி ஏற்படும். 

பெண்கள் பணியாற்றும் பணிசூழல் காரணமாகவும் மார்பு வலி ஏற்படலாம். நீண்ட நேரம் குனிந்துகொண்டு பணியாற்றி வரும் பெண்களுக்கு மார்பகங்கள் தளர்ந்து தொங்கி, தசை பகுதிகள் சோர்ந்து வலி ஏற்படும். சீரற்ற சாலைகளில் அதிகளவு தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதையும் குறைக்க வேண்டும்.

மார்பகத்தின் காம்புகள் உள்ளே இழுத்த நிலையில் இருந்து அல்லது இரத்தம் மற்றும் நீர் போன்ற திரவம் காம்புகள் வழியாக வெளியேறினால், இதனால் மார்பகம் சிவந்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. பெண்கள் மார்பக நலனில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். தரமான மற்றும் காற்றோட்டமான இறுக்கம் இல்லாத பிரா அணிவது சாலை சிறந்தது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women need to look out for in breast care and Reason for Breast Pain 22 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->