மார்பக தளர்ச்சி என்றால் என்ன?.. காரணங்கள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகள் என்ன?..! ஆசனம் மற்றும் இயற்கை வழிமுறைகள்...!
What Is Breast Sagging How to Prevent or Solve it Naturally Marpagam Thonguvathai Thalarvathai Sari Seithal
பெண்களுக்கு ஏற்படும் மார்பக தளர்ச்சிக்கான காரணம் என்ன?. அதனை எப்படி தவிர்ப்பது? அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் மார்பகங்கள் இயல்பாகவே தளர்ந்துவிடும். இது குழந்தைகள் பால் குடிப்பதால் ஏற்படும் மாற்றம் ஆகும். உடல் எடை அதிகரிப்பு, வயது காரணமாகவும் Breast Sagging என்ற மார்பக தளர்ச்சி ஏற்படும். இதனை தவிர்த்து மார்பகத்தை தாங்கி பிடிக்க பெண்களுக்கு பிரா உள்ளாடை உதவி செய்கிறது. உள்ளாடையை சௌகர்யமாக இருக்கும் வகையில் அணிவது சாலச்சிறந்தது. மார்பகங்கள் தளர்வடைவதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து இனி காணலாம்.

மார்பக தளர்ச்சிக்கான காரணம் :
வயதாகும் நேரங்களில் மார்பகத்தை தாங்கும் தசைகளில் பலவீனம் ஏற்படுகிறது. பிரசவ காலத்திற்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு மார்பகத்தில் பால் சுரக்கும். இதனால் மார்பகம் பெரிதாகிறது. குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் பால் சுரப்பு நிற்கும். இதன்போது மார்பகங்கள் தளர்வடையும். உடல் எடையை குறைத்தால் மார்பகம் தளர்வடையவதை குறைக்க முடியும். கர்ப்பத்திற்கு பின்னர் ஏற்படும் மார்பகத்தின் அளவு மாறுபாடு, பிரசவத்திற்கு பின்னர் பால் ஊட்டுதலை நிறுத்தியதும் ஏற்படும் மாற்றம் காரணமாக மார்பக சரும தசைகள் தளர்வடைகிறது.

மார்பக தளர்ச்சியை தவிர்க்கும் வழிமுறை :
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பெண்கள், மாதம் 2 முதல் 3 கிலோ வரை நிதானமாக உடற்பயிற்சி செய்து குறைக்க வேண்டும். ஒரே நேரத்தில் உடலுக்கு பளுவை கொடுத்து, மாதத்தில் 5 அல்லது 5 கிலோக்கு மேல் குறைக்க முயற்சதால் மார்பகம் தளர்ந்துவிடும். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு மார்பகம் விரைவில் தளர்ந்துவிடும். புற்றுநோய் அபாயமும் அதிகரிக்கும். மேலும், சரியான அளவுள்ள பிராவை அணிவது, இரவில் உறங்கும் போது பிராவை தவிர்ப்பதும் மார்பக தளர்ச்சியை தவிர்க்க வழிவகை செய்யும்.
இயற்கை முறைகள் :
உடற்பயிற்சி - புஜங்காசனா :
புஜங்கா என்றால் பாபு என்று பொருள். பாம்பு எப்படி படமெடுத்து இருக்குமோ, அதனைப்போல செய்யப்படும் ஆசன முறை புஜங்காசனா என்று அழைக்கப்படுகிறது. இது எளிமையான, அனைவராலும் செய்ய கூடிய ஆசனம் ஆகும். முதலில் குப்புற படுத்துக்கொண்டு கால்களை நீட்டி இருக்க வேண்டும். கைகள் இரண்டும் பக்கவாட்டு பகுதியில் இருக்க வேண்டும்.

பின்னர், தோள்பட்டைக்கு அருகில் கைகளை கொண்டு வந்து, மெதுவாக மூச்சை இழுத்தவாறு தலை, தோள்பட்டை, மார்பகம், வயிறு பகுதியை தூக்க வேண்டும். உடலின் இடுப்பு, தொடை, கால்கள் தரையில் இருக்க வேண்டும். 10 நொடி மூச்சை இழுத்துப்பிடித்தவாறு இருந்து, பின்னர் மெதுவாக மூச்சை விட்டு தரையில் இயல்பு நிலையில் வந்து படுக்க வேண்டும். இதனை போல 3 முறை செய்யலாம்.
புஜங்காசனா செய்ய கூடாத நபர்கள் :
கர்ப்பிணி பெண்கள், முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை உள்ள பெண்கள், தலைவலி, வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கார்பல் டனல் சிண்ட்ரோம் (Carpal Tunnel Syndrome) பிரச்சனை உள்ளார்கள் தவிர்க்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பிரசவம் நடந்து ஒருவருடம் கழித்து இதனை செய்யலாம்.

புஜங்காசனா பலன்கள் :
பெண்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கமாகும். 3 முதல் 4 மாதம் இவ்வாசனம் செய்து வந்தால் தோள்பட்டை பகுதி உறுதியாகும். பின்னிடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள சதை கரையும். ஆஸ்துமா பிரச்சனை சரியாகும். செரிமானம் சீராக நடைபெறும்.
பனிக்கட்டி (Ice Cube) வைத்து ஒத்தனம் கொடுத்தல் :
பனிக்கட்டி வைத்து மசாஜ் செய்தால் தளர்ந்த மார்பக தசைகள் இறுக்கம் பெரும். 2 பனிக்கட்டியை துணியில் வைத்து ஒரு மார்பகத்திற்கு ஒரு நிமிசம் வரை மசாஜ் செய்யலாம்.

ஆலிவ் எண்ணெய் :
உள்ளங்கையில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு, மார்பகத்தின் மேலிருந்து கீழாக 15 நிமிடம் வரை மசாஜ் செய்தால், மார்பகத்தின் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். மார்பகத்தில் உள்ள தசை, சரும செல்கள் புத்துணர்ச்சி அடையும். வாரத்தில் 4 முறை இதனை செய்யலாம்.
இதனைப்போல மாதுளை விதை எண்ணெய், அவகேடா எண்ணெய் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். மூன்றையும் ஒருசேர செய்ய கூடாது.
ஆயுர்வேத முகமூடி (Herbal Mask) :
வெள்ளரிக்காயை அரைத்து எடுத்துக்கொண்டு, வெண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்ந்து அதனை கலவையாக மாற்ற வேண்டும். இதனை மார்பகத்தில் பூசி, 30 நிமிடம் கழித்து கழுவலாம். இதனை வாரம் 1 முறை செய்தால், மார்பக தசைகள் இறுக்கமாகும்.

இதனைப்போல, வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து கலவையாக்கி எடுத்துக்கொண்டு, அதனை மார்பகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து இளம் சூடுள்ள நீரில் கழுவலாம். இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்.
குறிப்பு :
பெண்கள் உணவு கட்டுப்பாடு என்ற டயட் விஷயத்தை கர்ப்பமாக இருக்கும் போதும், பாலூட்டும் போதும் மேற்கொள்ள கூடாது. உடலுக்கு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கிடைக்கும் நேரங்களில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம். நிமிர்ந்து அமர வேண்டும். பிரா உள்ளாடையை சரியான அளவில், பருத்தியினால் ஆன துணியை அல்லது மிருதுவான ரக துணியை அணிவது நல்லது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
What Is Breast Sagging How to Prevent or Solve it Naturally Marpagam Thonguvathai Thalarvathai Sari Seithal