வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான வெண்ணிலா கேக்...! - Seithipunal
Seithipunal


கடைகளில் வாங்கும் வெண்ணிலா கேக்குகள் போல வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

மைதா மாவு - ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு கட்டி
சர்க்கரை - ஒரு கப்
முட்டை - 3
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு - சிறிதளவு

செய்முறை:

முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன், மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் கலந்ததும், சலித்த மாவு பாதியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்னர், பால் சேர்த்து கலந்து மீண்டும் மீதமுள்ள மாவு சேர்த்து கேக் மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

இந்த கலவையை மஃபின் கப்புகளில் ஊற்றி பின்னர் 180 டிகிரி வெப்பத்தில் ஓவனில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். ஓவன் இல்லாமல் இருந்தால் குக்கரில் தண்ணீர் வைத்து சில்வர் பவுலில் வைத்து ஒரு விசில் விட்டு எடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vennila cup cake recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->