Vegetarian special! முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்... எப்படி செய்வது...?
Vegetarian special Eggless Tutti Frutti Cake How to make it
முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
மைதா - 300 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
எண்ணெய் - 150 மில்லி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
டுட்டி பழம் - 400 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் - 100 மில்லி
பால் - 250 மிலி

செய்முறை :
முதலில் டுட்டி ப்ரூட்டி மீது சிறிதளவு மைதா மாவைத் தூவி நன்றாக கலந்து வைக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவைச் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க், பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொது மாவு கலவையை இதனுடன் சேர்த்து கலக்கவும். டுட்டி ப்ரூட்டியையும் இதனுடன் சேர்த்து, பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி பொன்நிறமாகும் வரை பேக் செய்யவும். பின் வெட்டி பரிமாறவும்.
English Summary
Vegetarian special Eggless Tutti Frutti Cake How to make it