MLA அலுவலகம் முன்பு எருமை மாடுகளுடன் போராட்டம் நடத்திய தம்பதியினர்!!! நடந்தது என்ன?
Couple protesting buffaloes front MLA office What happened
தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்த தம்பதி ஓடேலு மற்றும் லலிதா.இந்த தம்பதியினர் சிங்கரேணி அரசு மருத்துவமனை அருகே குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர்.அங்கு அவர்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த சூழலில் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்று கொடுத்தனர். அதில், சாலை விரிவாக்கம் செய்ய மாட்டுக்கொட்டகை இடிக்கப்படும் என அனுப்பினர். இதில் அதிகாரிகளின் நோட்டீசுக்கு ஓடேலு எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் நேற்று ஓடேலுவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் காவல் பாதுகாப்புடன் மாட்டு கொட்டகையை இடித்து தரைமட்டமாக்கினார்.
இதனைக் கண்ட தம்பதியினர் அதிர்ச்சியில் திகைத்தனர்.இதனால் நேற்று மாலை ஓடேலு தனது மனைவி மற்றும் உறவினர் ரமேஷ் என்பவருடன் அவருடைய எருமை மாடுகளை அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திற்கு கொண்டுசேர்த்துள்ளார்.
அங்கு எருமை மாடுகளை எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து, எம்.எல்.ஏ. தூண்டுதலின் பேரில் சட்ட விரோதமாக தனது மாட்டு கொட்டையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினார்.
இந்த தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய ஓடேலுவிடம் பேச்சுவார்த்தைஇ ஈடுபட்டனர்.அவர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் காவலர்கள் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது தன்னிடமிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்தக் கண்ட காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Couple protesting buffaloes front MLA office What happened