Beauty tips! சிவப்பு அழகு பெற, முகம் பளிச்சிட ஸ்ட்ராபெர்ரி பழத்தை பயன்படுத்துங்கள்...! - Seithipunal
Seithipunal


சிவப்பு  அழகு பெற:

  • நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும்.இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும்.20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும்.சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு:

  • ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதுடன், சில பழங்களை மசித்து, அதில் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சிறந்தது.

முகம் பளிச்சிட:

  • ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

முகத்தில் சோர்வு நீங்க:

  • மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் 'மாஸ்க்’ போல போடவும்.நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Use strawberries get radiant complexion and brighten your face


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->