ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை - தமிழகத்தில் சிறப்பு ரெயில் இயக்கம்.!!
special train run in tamilnadu for ayudha pooja and deepawali
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இந்த மாதம் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்ட்ரல்- செங்கோட்டைக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை புதன்கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கபடும்.
எழும்பூர்- நெல்லைக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
எழும்பூர்- தூத்துக்குடிக்கு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
சென்ட்ரல்- போத்தனூர் இடையே செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதிவை வரை வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
English Summary
special train run in tamilnadu for ayudha pooja and deepawali