இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் குறித்து ஆலோசனை: நிர்மலா சீதாராமன் தகவல்..!
Nirmala Sitharaman says discussions are underway on world class banks in India
மும்பையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை எனவும், இதற்காக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வங்கிகள் அமைப்பு சார்ந்த கடன் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நிதி கட்டுப்பாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நாம் பின்பற்ற வேண்டிய பல சுயசார்பு நடவடிக்கைகள் இன்னும் உள்ளன. அனைவருக்கும் நிதி சேவை கிடைக்கச் செய்வது என்பது வளர்ந்த பாரதத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளதோடு, இதனை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் வெற்றிகரமாக செய்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளளார்.
தொடர்ந்து, இந்தியாவிற்கு மிகப்பெரிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த வங்கிகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இதற்காக ரிசர்வ் வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாகவும், இது குறித்த பணிகள் ஏற்கனவே தொங்கியுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
English Summary
Nirmala Sitharaman says discussions are underway on world class banks in India