மியன்மாரில் வலுக்காட்டாயமாக சைபர் மோசடி கும்பலில் சிக்கிய 500 இந்தியர்களில் 270 பேர் இன்று நாடு திரும்பினர்..! - Seithipunal
Seithipunal


மியான்மரில் உலக மோசடிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் மியாவாட்டி பகுதி உள்ளது. இங்கு வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் அப்பாவிகளை வரவழைத்து அவர்களை மிரட்டி சர்வதேச மாபியா கும்பல் ஒன்று சைபர் வேலையில் ஈடுபடுத்தி வருகிறது. 

இத்தகைய துணிகர செயல் அங்குள்ள கே.கே. பார்க்கின் சைபர் கிரைம் மையத்தில் நடப்பதாக அந்நாட்டு அரசு கண்டறிந்து, கடந்த மாத இறுதியில் அதிரடி சோதனை நடத்தியது.  இதில், 28 நாடுகளைச் சேர்ந்த 1,500 அப்பாவிகள் சிக்கினர். இதில் அதிகமாக இந்தியர்கள் 500 பேர் அடங்கியிருந்தன. அவர்களை நாடு திருப்பி அனுப்பும் முயற்சியில் இந்திய துாதரகம் ஈடுபட்டுள்ளது.


இது குறித்து பாங்காக்கில் உள்ள இந்திய துாதரகம் தெரிவிக்கையில், இந்திய விமானப்படை இயக்கும் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 26 பெண்கள் உட்பட 270 இந்தியர்களை, மே சோட்டில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தாய்லாந்து அரசு ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளது. 

அத்துடன், மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியர்களை திருப்பி அனுப்புவதை உறுதி செய்ய தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளது.

மேலும், மீதமுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக இந்தியா நாளை கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

270 out of 500 Indians forcibly trapped in a cyber fraud gang in Myanmar returned to the country today


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->