ஏதாவது மிச்சமானா உப்மா செய்லாம்.! உப்புமாவே மீந்தால் என்ன செய்யலாம்.?!  - Seithipunal
Seithipunal


உப்புமா மீந்து விட்டதா.? உப்புமா மீந்து போனால் அதனுடன் கடலைமாவு, சுக்குதூள், ஓமம், சிறிது உப்பு ஆகியவற்றை சோத்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான போண்டா தயார்.

குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறிகளை வதக்கும் போது, வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கி விட்டு, அதன் பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கினால் குழம்பு பார்க்கவே அழகாக இருக்கும். ருசியும் அதிகமாகும்.

பாயாசம் நீர்த்துப் போனால் அதில் வாழைப் பழத்தை பிசைந்து போட்டு, சிறிது தேனும் கலந்து விட்டால் சுவையான பாயாசம் தயார்.

பாகற்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.

தக்காளி சட்னி செய்யும்போது கொஞ்சம் எள்ளையும் வறுத்து கலந்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

வாழைக்காய் சிப்ஸ் செய்யும்போது நேரடியாக எண்ணெயில் சீவிப் போட்டால் ஒன்றோடொன்று ஒட்டாது.

வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும்.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

upma bonda cooking tips in tamil 


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal