திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம்... பாரம்பரியமிக்க உணவு வகை...!
Tirunelveli Special Manoharam Traditional food
மனோகரம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பாசிப்பருப்பு - 2 கப்
பச்சரிசி - 3 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் பால் - அரை கப்
வெல்லம் - ஒன்றரைகப்
ஏலக்காய் தூள் - 5 சிட்டிகை
நெய் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில், பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு மணிNநுரம் ஊற வைத்து நீரை வடித்து, நைஸாக அரைத்து அதில் உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தேன்குழல் முறுக்கு குழாயில் மாவைப் போட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும்.
வெல்லத்தை தண்ணீரில் போட்டு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். பொரித்த தேன்குழலை நொறுக்கி வைக்கவும்.பின் நொறுக்கிய தேன்குழலில் ஏலக்காய் தூள், தேங்காய் பால் சேர்த்து கலந்த பின் பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்றாக கலந்தவுடன் மிதமான சூட்டில் இருக்கும் போது உருண்டையாகவோ அல்லது உதிர்தோ விடவும். இப்போது சுவையான மனோகரம் தயார்.
English Summary
Tirunelveli Special Manoharam Traditional food