சுவையான ''பருப்பு துவையல்'' ஒரு முறை இப்படி செய்து பாருங்க.!
Thuvaram paruppu thuvaiyal recipe in tamil
சுவையான பருப்பு துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு
புளி
பூண்டு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய்
எண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு கடாயில் துவரம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
புளி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கி அனைத்தும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எண்ணெய், கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அவ்வளவுதான் சுவையான பருப்பு துவையல் தயார்.
English Summary
Thuvaram paruppu thuvaiyal recipe in tamil