வந்து விட்டது மழைக்காலம்.. சளி, இருமல் பிரச்சனைகளை சரிசெய்யும் தூதுவளை சூப்..!
Thoothuvalai Soup
மழைக்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை தவிர்க்க நமது உணவில் தூதுவளையை சேர்த்துக் கொள்ளலாம். ஆஸ்துமா உள்ளவர்கள் தூதுவளை கட்டாயம் சேர்த்து கொள்ளலாம். அத்தனை நன்மைகள் உள்ள தூதுவளையில் சுவையான சூப் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை :
தூதுவளை இலைகள் - 10.
பூண்டு - 5 பல்,
தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா - தலா கைப்பிடியளவு
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
துளசி இலைகள் - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10.
செய்முறை :
சின்ன வெங்காயம், கொத்தமல்லியை நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில்,தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள். அதன்பின், வடிக்கட்டி மிளகுதூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம்.