சுவையான 'ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
ஸ்வீட் கார்ன் 
சிக்கன் 
கார்ன்ஃப்ளார் மாவு 
உப்பு 
முட்டை 
வினிகர் 
மிளகு தூள் 
வெங்காயத்தாள் 

செய்முறை: 
எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கான்பிளவர் மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். சிறிதளவு ஸ்வீட் கார்னை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும். பின்னர் அதில் வெங்காயத்தாள் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். 

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன், சிக்கன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதித்த உடன் கான்பிளவர் மாவு கரைச்சலை ஊற்றி, முழு ஸ்வீட் கார்னை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 

இறுதியாக மிளகு தூள், வினிகர் சேர்த்து இறக்கினால் அவ்வளவுதான் சூடான ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sweet Corn Chicken Soup recipe in tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->