ஷேவிங்க்,வேக்ஸிங் இல்லாமல் தேவையற்ற ரோமங்களை அகற்றலாம்., இனி இதை பயன்படுத்துங்கள்..!! - Seithipunal
Seithipunal


சில பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற ரோமங்கள் வளரும். இதனை பெண்கள் யாரும் அவ்வளவாக விரும்பவில்லை. மஞ்சள் தேய்து குளித்தால் அந்த ரோமங்கள்  நீங்கி விடும் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், தற்போதுள்ள சூழலில் மஞ்சளுக்கு மாற்றாக என்னென்ன பொருட்களைன் பயனபடுத்தலாம் என பார்போம்.

மக்காசோள மாவு: முட்டையின் வெள்ளைப் பகுதி, அரை ஸ்பூன் மக்கா சோளமாவு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி வர ரோமங்கள் அகன்று விடும்.

கடலை மாவு : கால் கப் கடலை மாவு, கால் கப் தேன், ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவி வெது வெதுப்பான நீரில் கழுவி வர  முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கும்.

சர்க்கரை : எலுமிச்சை மற்றும் சர்க்கரை இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். பின் அதை முகத்தில் தேய்த்துக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முடிகள் உதிரத் துவங்கும்.

கொண்டைக் கடலை மாவு : கொண்டைக் கடலை மாவுடன் மஞ்சள் ஒரு ஸ்பூன் சேர்த்துக் பேஸ்டாகக் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Some tips at home to get rid of unwanted hair


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->