இன்றைய ஸ்பெஷல் || ஹோட்டல் ஸ்டைலில் வெங்காய பொடி தோசை செய்வது எப்படி..!
onion podi Dosa
கடைகளில் வாங்கும் பொடி தோசைக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடைகளில் வாங்குவது போலவே வீட்டில் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை :
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவையான அளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைபொடியாக நறுக்கி தனியே வைத்து கொள்ளவும். அதன்பின் , தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, கலந்து வைத்த வெங்காய கலவையை தோசை மேல் தூவி அதன் மேல் இட்லி பொடி தூவி கொள்ளவும். அதன் அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அது வெந்ததும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து பரிமாறலாம்.