சுவையான ''நெத்திலி மீன் வடை'' இப்படி ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான நெத்திலி மீன் வடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
நெத்திலி மீன் 
தேங்காய் துருவல் 
சோம்பு 
மிளகாய் 
மஞ்சள் தூள் 
இஞ்சி 
சின்ன வெங்காயம் 
உப்பு 
எண்ணெய் 
புதினா 
கொத்தமல்லி 
கருவேப்பிலை 

செய்முறை: 
முதலில் நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து முள் நீக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் நெத்திலி மீன், தேங்காய் துருவல், மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, புதினா, சோம்பு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் கொத்தமல்லி, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள கலவையை வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த நெத்திலி மீன் வடை தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nethili Fish Vadai Recipe In Tamil


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->