சூடான மட்டன் யாழ்ப்பாண வருவல் செய்யலாமா...?
mutton yaazhpaana varuval
மட்டன் யாழ்ப்பாண வறுவல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
மட்டன் கால் - கிலோ
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
தனியா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க :
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கசகசா - அரை டீஸ்பூன்
இஞ்சி துண்டு - 1
பூண்டு பல் - 8
வறுத்து தூள் செய்ய :
காய்ந்த மிளகாய் - 4
பட்டை - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
தாளிக்க :
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை :
முதலில்,அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும்.பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும்.
அதன் பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.அவ்வளவுதான் சுவையான மட்டன் யாழ்ப்பாண வறுவல் தயார்.
English Summary
mutton yaazhpaana varuval