முல்தானிமெட்டியை எதனுடனெல்லாம் பயன்படுத்தலாம்.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!
Multhani Metti For Skin care tips
முல்தானி மெட்டி சருமத்தை பொலிவாகவும், புத்துணர்வாகவும் வைத்து கொள்ள உதவும். அதனை எதனுடனலாம் என தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை சாறு
ஒரு டேபிஸ் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்வோம். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர உங்கள் சருமத்தில் பொலிவாக மாறும்.

வேம்பு பவுடர்:
ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வேம்பு பவுடர், 2 தேக்கரண்டி தேன் மற்றும் 1 டிராப் வினிகர் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி காயந்ததும் கழுவி வர வேண்டும். வேம்பில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க உதவும்.
நெல்லிக்காய் பொடி:
ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து, அதனுடன் பப்பாளி பழத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி கழுவி வர சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்கள் நீக்கி பொலிவாக சருமம் கிடைக்கும்.
English Summary
Multhani Metti For Skin care tips