காரசாரமான 'கோவைக்காய் ஊறுகாய்' இப்படி ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


காரசாரமான சுவையில் கோவைக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
கோவைக்காய் 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள் 
புளி கரைச்சல் 
உப்பு 
நல்லெண்ணெய் 
கடுகு 
வெந்தயம் 
மிளகாய் 
கருவேப்பிலை 
வெல்லம் 
பூண்டு

செய்முறை:
முதலில் கோவைகாயை நன்கு கழுவி நீல நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் கடுகு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு பவுலில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கோவை காயில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து அதிலிருந்து வரும் சாற்றை பிரித்து வைத்துக்கொள்ளவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள கோவைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து புளிக்கரைச்சல் ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு வேக வைக்கவும். 

கோவைக்காய் நன்றாக வதங்கி வந்ததும் அரைத்து வைத்துள்ள கோடியை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கோயில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும் அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் ஊறுகாய் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovakkai urukai recipe in tamil 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->