சுவையான ஐஸ்டு லெமன் டீ செய்வது எப்படி.?!
iced lemon tea preparation
தேவையான பொருட்கள் :
பொடியாக நறுக்கிய லெமன் - 3 டீஸ்பூன்
டீ தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
லெமன் க்ராஸ் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து ஒன்றரை கப் நீர் விட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும்.
பின் டீ தூளை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். டீ தூள் போட்ட பின் கொதிக்க விட வேண்டாம்.
3 - 5 நிமிடம் கழித்து கலவையை வடிகட்டவும். அப்படியே லெமன் க்ராஸ் சுவை மாறாமல் குடிக்க விரும்பினால் இதையே சூடாகவோ, ஆற வைத்து ஐஸ் கட்டி சேர்த்தோ குடிக்கலாம்.
இன்னும் சற்று லைட்டாக மாற்றி, சுவை கூட்ட கலவையுடன் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.
ஒரு கப்பில் தேன் விட்டு, டீ கலவை எந்த அளவு விடுகிறோமோ அதில் பாதி அளவு குளிர்ந்த நீர் விட்டு சில ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
குளிர்ச்சியான, மணமான, சுவையான ஐஸ்டு லெமன் டீ தயார்.
English Summary
iced lemon tea preparation