பத்து நிமிடத்தில் பட்டாணி குருமா - இதோ உங்களுக்காக.!!
how to prepare pattani kuruma
தினமும் என்ன குழம்பு செய்வது என்று யோசிப்பதே பெரும் வேலையாக உள்ளது. அப்படி உள்ளவர்களுக்கு ஏற்ற பட்டாணி குருமா எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
பட்டாணி
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு
தக்காளி
கடுகு
கறிவேப்பிலை
பெருஞ்சீரகம்
துருவிய தேங்காய்
குறிப்புகள்:-
சமைப்பதற்கு முன்னதாக பட்டாணியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
ஊறிய இந்தப் பட்டாணியுடன் தக்காளியை சேர்த்து குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு குக்கரை திறந்து அதனை கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து மிக்சி ஜாரில் துருவிய தேங்காயுடன் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு பொறிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து, அதனுடன் கடைந்து வைத்துள்ள பட்டாணி தக்காளி கலவையை ஊற்ற வேண்டும்
இது ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் கலவை மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பட்டாணி குருமா தயார்.
English Summary
how to prepare pattani kuruma