வெற்றிலையில் பாயாசமா?
how to make vetrilai payasam
புதிய முறையில் வெற்றிலையை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
பாதாம் பிசின்
முந்திரி
பாதாம்
பிஸ்தா
பால்
வெற்றிலை
சர்க்கரை
ஏலக்காய் பொடி
உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா

செய்முறை:-
பாதாம் பிசிம், முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து வெற்றிலையை அரைத்து சாறு பிழிந்து கொள்ளவேண்டும். பின்னர் ஊறவைத்துள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா, உள்ளிட்ட அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து பாலை நன்கு காய்ச்சி எடுத்து அதில் வெற்றிலை சாறை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில், அரைத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா விழுதை சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து சர்க்கரை ஏலக்காய்ப் பொடி, ஊறவைத்துள்ள பாதாம் பிசின் சேர்த்து நன்றாக கலந்தது ஆறவைக்க வேண்டும்.
அது ஆறியவுடன் அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து மிதமான சில்லென்ற பதத்துடன் எடுத்தால் சுவையான வெற்றிலை பாயாசம் தயார்.
English Summary
how to make vetrilai payasam