நீட் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!
District Collector inspects NEET exam centres
ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற உள்ள நீட் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மொத்தம் 8-மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தேர்வு எழுதும் மையங்களான தாகூர் கலைக் கல்லூரி, ஜிப்மர் வளாகத்தில் இயங்கும் கேந்திர ய வித்யாலயா பள்ளி, மற்றும் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மையங்களுக்கு சென்று தேர்வு அறைகளில் நடத்துவதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மையங்களில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விசிறி வசதி. போதிய வெளிச்சம் சி.சி.டி.வி கேமராக்கள். ஜாமர் கருவி. பயோ மெட்ரிக் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மின்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் தயார் நிலையில் உள்ளார்கள் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். மேலும் தேர்வு நடைபெறும் அன்று இம்மையங்களுக்கு தேர்வாளர்கள் செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், கல்வித்துறை இனை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary
District Collector inspects NEET exam centres