வயிற்றுப்புண்ணை சரி செய்யும் பூசணிக்காய் சூப்.!
how to make poosanikai soup
உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்வதற்காக பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பூசணிக்காய் சூப் வைப்பது குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பூசணிக்காய் துண்டுகள்
வெண்ணெய்
கொத்தமல்லித்தழை
பால்
மிளகுத்தூள், சீரகத்தூள்
பூண்டு
சின்ன வெங்காயம்
உப்பு

செய்முறை:-
முதலில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும். இவை வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
பின்னர் தண்ணீரை வடித்து விட்டு பூசணிக்காயை மட்டும் எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால், சுவையான பூசணிக்காய் சூப் தயார்.
English Summary
how to make poosanikai soup