வெள்ளரிக்காயில் சூப்பா? - இதோ உங்களுக்காக.!! - Seithipunal
Seithipunal


வெள்ளரிக்காயில் சூப்பா? - இதோ உங்களுக்காக.!! 

கோடைக்காலம் வந்துவிட்டாலே வெள்ளரிக்காயின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது உடல் சூட்டைத் தணிக்கும் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடுவார்கள். அப்படி இந்த வெள்ளரிக்காயை வைத்து சூப் செய்வது எப்படி என்பது குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்: 

வெங்காயம், துருவிய வெள்ளரிக்காய், மைதா மாவு, காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், வெண்ணெய், மிளகுத்தூள், உப்பு, 

செய்முறை:-

முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதனை இரண்டு நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். அதன் பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு வதக்கி, சிறிது பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். 

இதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இதையடுத்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து இறக்கினால் சூடான வெள்ளரிக்காய் சூப் தயார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make cucumber soup


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->