பிரசவத்திற்கு பின்னான தொப்பை.. குறைப்பது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் வயிறு பெரிதாவது இயல்பான ஒன்றாகியுள்ளது. மேலும், சில பெண்களுக்கு தொப்பை அதிகமாக காணப்படும். இந்த தொப்பையினை குறைக்க பல வழிமுறைகள் உள்ளது. இனி இது குறித்த தகவலை நாம் காணலாம். 

காலை வேளையில் வழக்கமான இட்லி, தோசை, பொங்கல் மற்றும் பிரட் போன்ற உணவுகளை தவிர்த்து, பழங்களை சாப்பிட்டு வரலாம். இதனால் தொப்பை குறையும். காலை உணவாக பழங்களை எடுத்துக்கொண்டாலும் உடலுக்கு நல்லது. 

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவது, தொப்பையை கரைப்பது மட்டுமல்லாது, உடலில் இருக்கும் கழிவுகளையும் வெயியேற்ற உதவி செய்கிறது. இதனைப்போன்று கொள்ளு துவையல் மற்றும் கொள்ளு சுண்டல் போன்றவை சாப்பிடலாம். 

கொள்ளு இயல்பாகவே சூடு என்ற காரணத்தால் வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது. மேலும், மாதவிடாய் நேரத்தில் இதனை தவிர்ப்பதும் நல்லது. எலுமிச்சை பழத்தின் தோலை சிறிதாக நறுக்கி, சிறிதளவு இஞ்சியை பொடியாக நறுக்கி, அரை குவளை நீரில் கொதிக்க வைக்க வேண்டும். 

பின்னர் இந்த எலுமிச்சை இஞ்சி சாறு நன்றாக சுண்டியதும், இளம்சூடுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் கொழுப்பு மற்றும் கொழுப்புகளால் ஏற்படும் அடைப்பு போன்றவை நீங்கும். உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்பட்டு, இரத்தமானது சுத்தமாகும். தொப்பையை குறைக்கும். 

காய்கறிகளுடன் பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி மற்றும் சிறுதானியம், பாலிஷ் செய்யப்படாத அரிசி போன்றவற்றை சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும், காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டு, அரிசி உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். 

கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதம் போன்ற பல உணவுகள் மூலமாக கால்சியம் சத்துக்கள் கிடைக்கும். பால் குறைந்தளவு குடிக்க வேண்டும். ஆசைக்கு நீர்த்த மோரை சிறிதளவு குடிக்கலாம். 

காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்களில் இருக்கும் நார்சத்துகளின் மூலமாக நமது உடல்நலமும் அதிகரிக்கும். காய்கறிகள் மற்றும் பழங்களை பிரதான உணவாக்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் கீரையை சாப்பிட வேண்டும். 

இதனைத்தவிர்த்து யோகா செய்தல், மூச்சு பயிற்சி செய்தல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலமாக தொப்பையை எளிதில் குறைக்க இயலும். இதன் மூலமாக கொழுப்புகளும் உடலில் சேராது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to control stomach fat after baby delivery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal