உயிர் கொடுக்கும் கண்களின் அழகை பராமரிக்க வேண்டிய அழகு குறிப்புகள்...!
eyes beauty tips
இமை முடி வளர:
விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கவும்.
இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும்.
இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.

கண் வீக்கத்தினைப் போக்க:
கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு, ஈரமான தேயிலைத்தூள் பை (tea bags), வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால், உடனடியான பலனை உணரலாம்.
கருவளையம் மறைய:
வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள்.
இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.