சப்பாத்தி முதல் சாதம் வரை அனைத்திற்கும் சூப்பரான முட்டை தொக்கு..!
Egg Thokku Recipe
முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது. சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் தொட்டுக்க சுவையான முட்டை தொக்கு எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையானவை:
முட்டை - 4
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிது
தாளிக்க
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 1
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
முதலில் முட்டையை வேகவைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை கொடுத்து தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசம் போனதும் அதில் தக்காளி சேர்க்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மசாலா கெட்டியானதும் வேக வைத்த முட்டையை நடுவில் கீறி மசாலா கலவையுடன் சேர்க்கவும். முட்டையில் மசாலா நன்றாக சேர்ந்தவுடன் அதனை கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.