சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் ரெசிபி..!
egg fried rice preparation
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
முட்டை - 6
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
கேரட் - 1
குடைமிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து 1 கப் அரிசிக்கு 2 கப் என்ற கணக்கில் 4 கப் தண்ணீர் ஊற்றி சாதத்தை வடித்துக் கொள்ளவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும். கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும்.
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
அதனுடன் குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பின்பு வதக்கிய கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும். இதில் உப்பு, மிளகுத்தூள் போட்டு கிளறவும்.
பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விட்டு வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய கேரட், கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம். சூடான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி!
English Summary
egg fried rice preparation