சுவையான சமையல் செய்யும் சமையலறை... சுத்தமாக வைத்திருப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


சமையலறை சுத்தமாக இருந்தால் நாம் சமைக்கும் உணவும் சுத்தமாக இருக்கும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க சில வழி முறைகளை பின்பற்றுவோம்.

நம் சமையலறையில் குப்பைக் கூடையை பாத்திரம் கழுவும் சிங்கிற்கு கீழ் வைத்துக் கொள்ளலாம். மூடும் வசதியுடைய கூடை இருந்தால் நல்லது.

இந்த குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்தை தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைத்தால் எந்த துர்நாற்றமும் வராது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றிக் கொள்ளலாம்.

உங்களின் சமையல் பலகையின் மேலுள்ள கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்க, எலுமிச்சை சாறு அல்லது சோப்பு போன்றவற்றுடன் ஒரு மென்மையான துணியை பயன்படுத்தி லேசாக துடைத்து சுத்தப்படுத்துங்கள்.

உணவுகள் தயாரித்து முடித்த பிறகு, சிங்க்கில் சிறிதளவு கல் உப்பை போடுங்கள். உப்பு மீது சிறிதளவு கருப்பு வினிகர் ஊற்றி, ஒரு பிரஷை பயன்படுத்தி, மெதுவாக சிங்க்கை தேய்த்து விடுங்கள். வினிகர் துர்நாற்றத்தை நீக்கவும், உப்பு கறையை நீக்கவும் பயன்படுகின்றது.

பாத்திரத்தை துலக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அதன் ஒரு சதுர இன்ஞ் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். 

ஸ்பாஞ்சை சுத்தம் செய்யாமல் அடிக்கடி ஒரே ஸ்பாஞ்சை உபயோகித்தால் நம் கைகளில் பாக்டீரியாக்கள் படிந்து, வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும்.

இதை தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பாஞ்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் பவுடர் கலந்த வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் அழிந்துவிடும். கழுவிய பாத்திரங்களை, வெயிலில் காய வைத்து உடனுக்குடன் துடைத்து வைத்தால், தேவையில்லாத துர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.

கேஸ் அடுப்பில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க அடுப்பிலும், சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாக துடைத்தால், அடுப்பும், அடுப்பு வைத்துள்ள மேடையும் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooking tips 9


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal